வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி பேஸ்புக் சர்ச்சை!

Saturday, September 10th, 2016

பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது.

பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித்துள்ளது.

பல வாரங்களுக்குமுன், நார்வே எழுத்தாளர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து அவரது பதிவும் நீக்கப்பட்டது.பேஸ்புக்கின் இந்த முடிவு குறித்து அந்த புகைப்படத்துடன் செய்தியை பதிவு செய்திருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நோர்வே பிரதமர் அதே படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதையும், ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

151026153353_kim_phuc_vietnam_war_napalm_girl_512x288_bbc_nocredit

Related posts: