ஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்!

Monday, September 10th, 2018

வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 ஆம் திகதி பிரம்மாண்டமாக நடைபெறும்.

அதையொட்டி நடைபெறுகின்ற இராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். இராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

நேற்று காலை ஆரம்பமான விழாவில் இராணுவ வீரர்கள், வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை எனவும், பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts: