எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு!

Thursday, March 29th, 2018

கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு எதியோப்பியாவின் பிரதமராக ஐலிமரியாம் தேசாலென் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சிக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்நாட்டின் நன்மைகள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குழப்பங்களுக்கு தீர்வுகாண பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் நீண்ட காலமாக முயற்சி செய்துவந்தார். ஆனால் அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், எதியோப்பியாவின் புதிய பிரதமராக அபிய் அகமது தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதியோப்பியா மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி கூட்டணியை சேர்ந்த 180 பாராளுமன்றஉறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அவரை தேர்வு செய்துள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: