எந்தவொரு பகுதியிலும் தீ வைக்க முடியாது : பிரதமர் அதிரடி அறிவிப்பு..!
Saturday, August 31st, 2019
நில சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்காக தீ வைக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு பிரேஸில் தடை விதித்துள்ளது.
அமேசன் மழைக்காடுகளில் தீப்பரவலின் காரணமாக, பெருமளவான காடுகளில் அழிவடைந்துள்ள நிலையில், பிரேஸில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமேசன் மழைக்காடுகளை பாதுகாக்கத் தவறியதாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ குறித்த நடவடிக்கைக்கான ஆணையில் கையொப்பமிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில், குறித்த நெருக்கடி நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்கு தென் அமெரிக்க நாடுகள் அடுத்தவாரம் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
எச்-1 பி விசாவுக்கு 2 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பம்!
துருக்கியில் இராணுவப் புரட்சி? நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!
யோசனை முன்வைத்துள்ள தென்கொரியா!
|
|
|


