ஜெயலலிதாவை பார்வையிட்ட பிரதமர் மோடி-சந்திரபாபுநாயுடு!

Saturday, October 8th, 2016

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற் பட்டது. இதனால் அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு அப் பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இதனால் அன்று இரவே காய்ச்சல் குணப்படுத்தப் பட்டது. ஆனாலும் சளி தொந்தரவு நீர்சத்து குறை பாடு இருந்ததால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஜெய லலிதாவுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டுஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவ ரும் முதல்-அமைச்சர் ஜெய லலிதாவின் உடல் நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தார்.

டாக்டர்களின் தீவிர சிகிச்சையின் காரணமாக அவரது உடல்நிலையில் முன் னேற்றம் காணப்பட்டது. டாக்டர் சிவக்குமார் தலை மையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் ஜெயலலிதாவின் உடல் நிலையை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து மருத்துவ பரி சோதனைகளை மேற் கொண்டு சிகிச்சை அளிக் கின்றனர்.

இதற்கிடையே இந்த வார தொடக்கத்தில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் இருந்து நுரை யீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்நானி, மயக்க வியல் தீவிர சிகிச்சை நிபு ணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ்நாயக் ஆகியோர்அடங்கிய மருத்துவ குழுவினர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தனர். தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் வழங் கினார்கள்.

டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து சிகிச்சை மேற்கொண்டனர். இதனால் ஜெயலலிதாவின் உடல்நிலை மேலும் முன் னேற்றம் அடைந்து வருகிறது.

17-வது நாளாக சிகிச்சை பெற்று  வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் முக்கிய அரசியல்வாதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று அகில இந்திய காங்ககிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி  அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று  டாக்டர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் பறறி விசாரித்தார்.

இன்று மறுமலர்ச்சி தி.மு.க பொது செயலாளர் வைகோ  வந்தார் . அங்கு அவர் மருத்துவர்களிடம் முதல்-அமைச்சர் உடல் நிலை குறித்தும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார். அவருக்கு பூரண நலம் பெற சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாண்பு மிகு முதல்-அமைச்சர் உடல் நலம் பெற்று  திரும்ப வேண்டும் என இயற்கை அன்னையை வேண்டுகிறேன்.  அ.தி.மு.க. தொண்டர்களின் கவலை விரைவில் தீரும் அவர் பூரண நலமுடன் வீடு திரும்புவார்.என கூறினார்.

hospital-jaffna--china-sri-lanka copy

Related posts: