ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு வருகை தரும்படி டொனால்ட் டிரம்புக்கு அழைப்பு!

Thursday, November 10th, 2016

இரண்டாம் உலகப்போரின் போது அணுகுண்டுகளால் அழிக்கப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமா நாகாசாகி ஆகிய நகரங்களின் மேயர்கள், அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப் தங்கள் நகரத்துக்கு வந்து நடந்ததை பார்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

டிரம்ப் பிரசாரத்தின் போது, ஜப்பான் சொந்தமாக அணு ஆயுதங்களை பெறலாம் என்று கூறியிருந்தார். அணு ஆயுதமில்லா உலகிற்கான உறுதியான நடவடிக்கைகளை டிரம்ப் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஹிரோஷிமா மேயர் கஸூமி மாட்சூ அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாகாசாகியில் அணுகுண்டு வீச்சைத் தொடர்ந்து அங்கு என்ன நடந்தது என்பதை டிரம்ப் பார்வையிட்டு, கேட்டு, இதயபூர்வமாக உணர்வார் என்பதை தான் எதிர்பார்ப்பதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.

hiro_800669302

Related posts: