அடுத்த மாதம் அமெரிக்க – சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!

அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கான வரியினை அதிகரித்து வந்த நிலையில், வர்த்தக பேச்சுவார்த்தைகள் முற்றாக பாதிப்படையும் என அஞ்சப்பட்டது.
செப்டம்பர் முதலாம் திகதி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இந்த காரணங்களுக்காக பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டிருந்தன.
சீன பிரதி பிரதமர் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொடே; லைத்திஸ்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க திறைசேரி செயலரும் இந்த தொலைபேசி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!
கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை!
சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!
|
|