கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்தில் பதிலளித்த சுந்தர் பிச்சை!

Friday, July 20th, 2018

ஐரோப்பிய கூட்டமைப்பு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்த விவகாரத்துக்கு, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் ஐரோப்பிய கூட்டமைப்பின் விதிமுறைகளை மீறியதாக, சுமார் 4.34 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய கூட்டமைப்பு அபராதமாக விதித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
‘ஐரோப்பிய கூட்டமைப்பின் நடவடிக்கை, இலவச ஆண்ட்ராய்டு வியாபாரத்தின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும். பயனாளிகள் சராசரியாக 50 செயலிகளை தாங்களாகவே Install செய்கின்றனர்.
மேலும், Free-Install செய்யப்பட்ட செயலிகளை பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் Uninstall செய்துகொள்ள முடியும். கைப்பேசி தயாரிப்பாளர்கள் மற்றும் Mobile Network Operators, எங்களது செயலிகளை தங்களது சாதனங்களில் அனுமதிக்காத போது, ஆண்ட்ராய்டு தளத்தை இது பெரிதும் பாதிக்கும்.
இதுவரை எங்களின் வியாபார யுக்தியானது, கைப்பேசி உற்பத்தியாளர்களிடம் எங்களது தொழில்நுட்பத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தவோ அல்லது கடினமான விநியோக முறையை பின்பற்ற வேண்டிய சூழலையோ ஏற்படுத்தவில்லை’ என தெரிவித்துள்ளார்.

Related posts: