சிட்வே துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு!

Tuesday, May 16th, 2023

இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஆயுஷ் சர்பானந்தா சோனோவால், மியான்மரின் துணைப் பிரதமரும் மத்திய போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சருமான அட்மிரல் டின் ஆங் சான் ஆகியோர் கூட்டாக மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் உள்ள சிட்வே துறைமுகத்தை திறந்து வைத்தனர்.

சிட்வே துறைமுகத்தின் வளர்ச்சியுடன் கொல்கத்தா மற்றும் அகர்தலா மற்றும் ஐஸ்வால் இடையே சரக்குகளின் போக்குவரத்து செலவு மற்றும் நேரம் 50 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடகிழக்கு இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற உள்ளது.

சிட்வே துறைமுகமக நிர்மாணத்திற்கு காலடன் மல்டி-மாடல் டிரான்சிட் டிரான்ஸ்போர்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசின் மானிய உதவியின் கீழ் நிதியளிக்கப்பட்டது.

இதன்போது, சோனோவால் கூறுகையில், ‘இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கும் இது ஒரு வரலாற்று நாள், பரஸ்பர வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான உறவை சிட்வே துறைமுகத்தில் தொடங்குவதன் மூலம் நாங்கள் மேம்படுத்துகிறோம்.

இந்தியா மற்றும் மியான்மர் இடையே, குறிப்பாக வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரின் ராக்கைன் மாநிலத்திற்கு இடையே வர்த்தகத்தில் பெரும் மதிப்பைத் ஏற்படுத்த இந்த துறைமுகம் போதுமான வாய்ப்பை வழங்குகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், வடகிழக்கு இந்தியாவின் ஆற்றல் மற்றும் சாத்தியக்கூறுகளை செயல்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் சிட்வே துறைமுகத்தின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. சிட்வே துறைமுகம் தொடங்கப்பட்டதன் மூலம் நமது வரலாற்று உறவுகளை மேலும் ஒருங்கிணைக்கும் என்றார்.

அட்மிரல் டின் ஆங் சான் மற்றும் மியான்மர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். சிட்வே துறைமுகம் போன்ற வளர்ச்சி முயற்சிகள் மூலம் மியான்மர் மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதியுடன் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் நுழைவாயிலாக சிட்வே துறைமுகம் செயல்படும், மியன்மாரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: