ஹக்கர்களின் நடவடிக்கைகளை நாங்கள் அங்கிகரிக்வில்லை. ஆனால், பலரை வெளிப்படுத்த அவை உதவியுள்ளன – புட்டின்!

Wednesday, September 21st, 2016

ஊக்கமருந்துக்கெதிரான உலக முகவராண்மையின் (WADA) தரவுத்தளத்திலிருந்து, மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த ஹக்கினை, ரஷ்யர்களே மேற்கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்படுவதோடு, இதை நிறுத்துவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறு, ரஷ்ய அரசாங்கத்திடம் WADA-இனால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “ஹக்கர்களின் நடவடிக்கைகளை நாங்கள் அங்கிகரிக்வில்லை. ஆனால், பலரை வெளிப்படுத்த அவை உதவியுள்ளன. ஒலிம்பிக் பங்குபற்றி, மிகவும் ஆரோக்கியமாகத் தெரிந்த பலர், தடைசெய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டுள்ளதோடு, அது அவர்களுக்குப் போட்டியில் அனுகூலத்தை வழங்கியுள்ளது” என்றார்.

அரச ஆதரவுபெற்ற ஊக்கமருந்துப் பாவனைக்காக, பராலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவே முழுமையாகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கை, நேர்மையற்றதும் பாசாங்கானதும் கோழைத்தனமானதும் ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Vladimir_Putin-6-720x480

Related posts: