உக்ரைனுக்கு மேலும் 300 மில்லியன் டொலருக்கு இராணுவ நிதி உதவி – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, June 2nd, 2023

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ரொக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளார்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் துவங்கியதில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: