சீனாவில் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!  

Saturday, August 19th, 2017

சீனாவின் மிகப்பெரிய அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பெட்ரோசைனாவில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றைய தினம் ஏற்பட்ட பாரிய தீயை சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தீ பரவலினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இரு மாதங்களுக்கு முன்னர் பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் லியோனிங் மாநிலத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையானது, மூன்று கச்சா எண்ணெய் வடிகட்டல் பிரிவுகளை கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் நாளொன்றுக்கு 4 இலட்சத்து 10 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறான நிலையில், ஏற்பட்ட குறித்த அனர்த்தத்தில் ஆலைகளின் கச்சா செயலாக்க நடவடிக்கைகளில் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: