ஹவாயிலுள்ள எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில்!
Wednesday, May 9th, 2018
ஹவாயில் உள்ள கிலேயுவா (Kilauea) எரிமலை தொடர்ந்தும் உக்கிரநிலையில் செயல்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த எரிமலை சீற்றம் காரணமாக 26 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்படையக் கூடிய நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலிருந்து சுமார் இரண்டாயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த எரிமலை 35 வருட கால பழைமை வாய்ந்ததுடன் சர்வதேச ரீதியாக தொடர்ந்தும் வெடிப்பை ஏற்படுத்தி வரும் எரிமலைகளில் ஒன்றாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இங்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று 6.9 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : விமானி பலி!
இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த ட்ரம்ப்!
தென்கிழக்கு ஆப்பிரிக்க மொசாம்பிக் கடற்கரையில் படகு விபத்து - 90 பேர் உயிரிழந்தனர் தகவல்!
|
|
|


