ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!
Sunday, June 19th, 2022
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு பெரிய இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் சனிக்கிழமை இந்த பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீயை அணைக்க ஷாங்காய் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு 500 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது தீ கட்டுக்குள் வந்துள்ளதாகவும், எனினும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றை அடுத்து கடந்த இரண்டு மாதங்கள் நீடித்த கடுமையான முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து கடந்த வாரம் ஷாங்காய் விடுவிக்கப்பட்டது.
000
Related posts:
அமெரிக்காவின் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி பிரயோகம்!
கனடாவில் குடும்பத்தையும் வெட்டி கொன்று இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்!
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு - அபிவிருத்திக்கான சவுதி நிதியம் பிரதமரிடம் உற...
|
|
|


