பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பில் எவ்விதமாற்றமும் இல்லை!

Thursday, February 14th, 2019

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் நடவடிக்கைகளை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தாமதப்படுத்தலாம் என வெளியான செய்தியினை பிரெக்ஸிட் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் மறுத்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 53% மானோர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை பிரித்தானியா தாமதப்படுத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 49% ஆனோர் ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால் அது பேரழிவை ஏற்படுத்தி விடும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தம் இன்னும் இணக்கப்பாட்டுக்கு வராத நிலையில், குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ப்ரெக்சிட் நடவடிக்கை தாமதப்படும் என்று இரண்டு தெரிவுகளை பிரித்தானிய பிரதமர் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், பிரெக்ஸிட் தீர்மானிக்கப்பட்டதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதியுடன் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: