விண்வெளி நிலைய பயணத்துக்கு தயாராகும் சீனா!

Sunday, October 16th, 2016

விண்வெளி ஆராய்ச்சியில் சீனா அதன் திறனை அதிகரிக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக திங்கட்கிழமை காலை பூமியின் சுற்றுப்பாதையில் இரு விண்வெளி வீரர்களை சீனா அனுப்ப உள்ளது.

வடக்கு சீனாவில் உள்ள ஜியோசுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்திலிருந்து விண்வெளி வீரர்கள் புறப்பட உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உள்ள டியென்கோங் 2 விண்வெளி நிலையத்தை சென்றடைந்து அங்கு 30 நாட்கள் தங்கி வாழ்வதற்கான திறனை சோதிக்கும் வகையில் அவர்களுடைய பயண திட்டம் அமைந்துள்ளது.

சீனாவின் தற்போதைய மற்றும் முந்தைய விண்வெளி பயணங்கள், நிலவு அல்லது செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்பும் சாத்தியமான முயற்சிகளுக்கு கட்டியம் கூறுவதாக பார்க்கப்படுகின்றன.

_91944711_7e7f7264-163f-416f-a724-1e818b0acf6d

Related posts: