சிறுவர்களை விட அதிக நேரம் உழைக்கும் சிறுமிகள்: சொல்கிறது ஐ.நா. அறிக்கை!

Saturday, October 8th, 2016

சிறுவர்களோடு ஒப்பிடுகையில், சிறுமிகள் வீட்டு வேலைகளை செய்வதில், சராசரியாக 40 சதவீத நேரம் அதிகமாக செலவிடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் முகமை ( யூனிசெஃப்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

இந்த நிலை, பெண் குழந்தைகளின் கற்கும் திறன் மற்றும் அவர்களின் குழந்தைப் பருவத்தை அனுபவிப்பதில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என் யுனிசெப்பை சேர்ந்த அஞ்சு மல்ஹோத்ரா கூறியுள்ளார்.

இந்த அறிக்கை, பெண் குழந்தைகளுக்கு கூடுதல் பணிச்சுமை காலப் போக்கில் அதிகரிக்கிறு என்றும், 14 வயதான பெண் குழந்தைகள் அதே வயது சிறுவர்கள் செய்வதை விட பாதி மடங்கு அதிக வேலை செய்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளது.குடிநீர் எடுக்க செல்வது அல்லது விறகுகளை சேகரிக்கச் செல்வது போன்ற பணிகளை செய்யும்போது அவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் ஆபத்து அதிக அளவில் உள்ளது என்றும் அது கூறுகிறது.

சோமாலியாவைச் சேர்ந்த 10 மற்றும் 14 வயது பெண் குழந்தைகள் ஒரு வாரத்தில் 26 மணி நேரத்தை வீட்டு வேலைகளை செய்வதில் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. இது மற்ற எந்த நாட்டை விடவும், அதிகமாகும்.

_91558262_somaliagirlchildren

Related posts: