சிறுமியின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் – யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஒப்படைப்பு!

Tuesday, September 19th, 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

கடந்த 13 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதவான் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை தருமாறு மூவர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்தார்.

விசாரணை குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு மேலும் 10 நாட்கள் எடுக்கும் நிலையில் வழக்கை எதிர்வரும் 27ஆம் திதிக்கு நீதவான ஒத்தி வைத்தார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் போதனா வைத்தியசாலை சார்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: