இன்று இரு மணிநேர மின் துண்டிப்பு – நாளையதினமும் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் துண்டிப்பு – பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 9th, 2022

நாட்டில் இன்றையதினமும் இரண்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றையதினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது.

P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

அத்துடன், நாளையதினம் A முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 11ஆம் 12 ஆம் திகதி மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் A முதல் L வரையான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும், மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாகவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 10.45 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும்,

மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமிழ், சிங்களப் புத்தாண்டு காலமான எதிர்வரும் 13ஆம், 14ஆம் 15 ஆம் திகதிகளில் நாட்டில் மின்தடை அமுலாக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது பெற்றுக் கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நீர்மின் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் மழைவீழச்சி பதிவாகியுள்ளது.

இதன்காரணமாக இந்த வாரத்தை விட எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு காலம் மேலும் குறைக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும், 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: