துறைமுகத்தில் தேங்கியுள்ள 2, 000 கொள்கலன்களை விடுவிக்க நடவடிக்கை: இந்திய இறக்குமதிக்கு முன்னுரிமை என வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Saturday, March 19th, 2022

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 2,000 கொள்கலன்களை விடுவிப்பதற்கான கட்டணத்தை வழங்க, நிதியமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சு என்பன இணங்கியுள்ளாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக அதன் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரிசி. சீனி, பெரிய வெங்காயம், மிளகாய், கடலை மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள், இந்தியாவினால் வழங்கப்படும் கடனுதவியின் கீழ் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு தமது அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: