தொன் கணக்கில் குப்பைகளை இறக்குமதி செய்யும் ஸ்வீடன்!

Thursday, December 15th, 2016

வெளிநாடுகளில் இருந்து ஸ்வீடன் குப்பைகளை இறக்குமதி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்வீடன் நாட்டின் மின்சார உற்பத்தி பெருமளவு குப்பைகளில் இருந்தே மேற்கொள்ளப்படுகிறது.

அங்குள்ள தனியார் நிறுவனங்கள் கழிவை எரித்தால் கூட அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் எனும் கொள்கை செயற்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், உள்நாட்டில் கிடைத்த குப்பைகளை மறுசுழற்சி செய்து முடித்துவிட்ட ஸ்வீடன், தற்போது வெளிநாடுகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரித்து வருகிறது.

இந்த நடைமுறையை ”மறுசுழற்சி புரட்சி” என வர்ணிக்கிறது ஐரோப்பா. ஸ்வீடனில் ஆண்டுதோறும் மக்களால் கொட்டப்படுகின்ற குப்பைகளில் 99 சதவிகிதக் குப்பைகள் மறுசுழற்சிக்கும் இன்னபிற ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கும் செல்கின்றன. 2011 இல் வெறும் 97 சதவிகிதமாக இருந்த இந்த அளவை இப்போது 99 சதவிகிதமாக ஆக்கியிருக்கிறார்கள்.

Paper-recycling

Related posts: