விஜய் மல்லையாவை கைது செய்ய இன்டர்போலின் உதவியை நாடும் அமலாக்கத் துறை!

Friday, May 13th, 2016

இலண்டன் தப்பிச்சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்குமாறு சர்வதேச இண்டர் போல் போலீசாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.

வங்கிகளில் 9,600 கோடி ரூபாய் வரை கடன் பெற்று, திருப்பி செலுத்தாத நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனை அடுத்து, அவரது பாஸ்போர்ட்டை முடக்கிய மத்திய அரசு, மல்லையாவை இந்தியா கொண்டுவந்து விசாரிக்கும் நடவடிக்கைளில் இறங்கியுள்ளது.

ஆனால், மல்லையாவை திருப்பி அனுப்ப, பிரிட்டன் அரசு மறுத்துவிட்டதால், இவ்வழக்கை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மல்லையாவை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்குமாறு, இண்டர் போல் போலீசாரை, மத்திய அமலாக்க அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதனையொட்டி, ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறும், இண்டர் போல் போலீசாரை, அமலாக்க அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts: