அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்: ஜப்பானை மிரட்டும் வடகொரியா!

Thursday, October 5th, 2017

வடகொரியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அதிகரிக்குமாறு ஜப்பான் சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்திய நிலையில் அந்நாடு அணுஆயுத அழிவுகளை சந்திக்கும் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் பேசிய ஜப்பான் பிரதமர் அபே, வடகொரியா அதன் அணுஆயுத சோதனைகளை கைவிட சர்வதேச நாடுகள் பேச்சு வார்த்தை நடத்துவதைவிட அதன் மீது பொருளாதார தடைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பான் பிரதமர் அபேயின் உரை குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வுன் கூறும்போது ஜப்பான் பிரதமர் அபே அரசியல் நோக்கங்களுக்காக பொருளாதார நெருக்கடிகளை வடகொரியா மீது பயன்படுத்துகிறார் என்றார்.

மேலும் வடகொரிய மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்த ஜப்பான் அதன் ராக்கெட்களை வீசி வருகிறது.ஜாப்பான் அதன் மறைமுக நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் அணு ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகும் என்று கூறியுள்ளது.முன்னதாக வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துவரும் அமெரிக்கா தனக்கு தானே அழிவை தேடிக் கொண்டிருக்கிறது என்று வடகொரியா எச்சரித்த நிலையில் ஜப்பானுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது

Related posts: