விசா மோசடி: 129 இந்திய மாணவர்கள் கைது!

Saturday, February 2nd, 2019

விசா மோசடியில் ஈடுபட்டு அமெரிக்காவில் தங்கியிருந்தமை தொடர்பில் 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான பல்கலைக்கழகத்தை பதிவுசெய்து அவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தமை காவல்துறை விசாரணைகளின் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் விசா மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதற்காக போலியான பல்கலைக் கழகம் ஒன்று காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பலரும் அதில் தங்களை பதிவு செய்துகொண்டு விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பல்கலைக்கழகத்தின் கற்கைநெறிகள் சட்ட விரோதமானவை என்று தெரிந்தும், அதில் பல மாணவர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து போலி பல்கலைக் கழகத்தில் சேர்ந்த மாணவர்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 130 பேரில் இந்தியர்கள் மட்டும் 129 பேர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை மீட்க இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Related posts: