இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்!

Wednesday, August 7th, 2019

இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரதிய ஜனதா கட்சியின், மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் உடல்நிலை நலிவுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பினால் மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016 ஆண்டு சக்கரை நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயல் இழந்ததாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் புதுடெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர அரசியலில் இருந்து விலகினார் சுஷ்மா.

இந்நிலையில், சுஷ்மாவுக்கு இன்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

கவலைக்கிடமாக அவர் இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. முன்னதாக சுஷ்மாவை பார்க்க மத்திய அமைச்சர்கள் ஹர்சவர்தன் ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் , மற்றும் பா.ஜ. மூத்த தலைவர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: