உலக எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் பேரணி!

Thursday, November 30th, 2017

உலக எச்.ஐ.வி எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு யாழில் மாபெரும் பேரணி இடம்பெற்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது, கஸ்தூரியார் வீதி வழியாக மீண்டுமு; யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைவடைந்தது. அதன் பின்னர் தாதியர் பயிற்சிக் கல்லூரியில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இன்று (30.11) இடம்பெற்றன.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி உரையாற்றுகையில், வைத்தியசாலைகளில் பற்றாக்குறைகள் இருக்கின்ற போதும் எம்மாலான சிறந்த சேவையை வழங்கி வருகின்றோம் ஆனால் அதையும் தாண்டி தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சிகிக்சை பலனின்றி சிலர் இறக்க கூடும் மக்கள் அதனை சரியான வகையில் புரந்து கொள்ளாமல் தவறாக கனயீன குறைவால் உயிரிழப்பு நேர்ந்துள்ளது என கூறுவது தவறு.

மக்கள் தமது சுக நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் அதனை விட்டு தமது உடல் நலத்தில் கவனமின்றி பல்வேறு வியாதிகளுடன் வருகின்றவர்களையும் வைத்தியசாலை முகங்கொடுக்க நேரிடுகின்றது எனவே பொதுமக்கள் ஒவ்வொருவரும் சுகதேகியாக வாழவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு வாழவேண்டும். அவ்வாறே அவர்களுக்கான உரிமைகளை அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் வைத்தியர்கள் என அனைவரும் அவர்களிற்கு வழங்க தவறகூடாது என;றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் யாழ் போதனா வைத்திய சாலையின் உதவிப்பணிப்பாளர் பவானந்தராஜா பால்வினை தொற்று நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய நிபுணர் பிரியந்த பட்டேகெலஇ தத்தியர்கள்இ தாதியர்கள்இ தாதிய பயிலுனர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

received_1493869143994838 received_1493868933994859

Related posts: