உதயங்க விவகாரம்: இராஐ தந்திர நெருக்கடியில் அபுதாபி !

Friday, February 9th, 2018

டுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்காவை தம்மிடம் கையளிக்குமாறு ரஷ்யாவும் அபுதாபி அதிகாரிகளிடம் கோரியுள்ளது இலங்கை உக்கிரன் ஆகிய நாடுகள் முன்னதாக இந்தக் கோரிக்கையை விடுத்திருந்த நிலையில் தற்போது ரஷ்யாவம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதால் அபதாபி கடும் இராஐ தந்திர நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது

அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் டுபாய் வானூர்தி நிலையத்தில் கடந்த 4 ம் திகதி உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார். பன்னாட்டுப் பொலிஸாரால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட அவர் டுபாய் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பபட்டு அபுதாபி அதிகரிகளிடம் கையளிக்கப்பட்டார்

இவரை இலங்கைக்கு கொண்டு வருவதாக 7 அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுவொன்று டுபாய்க்கு நேற்றுப் பயணமானது தற்போது அபுதாபியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை தமது நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன உதயங்க வீரதுங்க தமது நாட்டுக் குடியுரிமை பெற்றவர் என்ற வகையில் அவரைத் தமது நாட்டுக்கு  அனுப்புமாறு உக்ரேனிய அதிகாரிகள் கோரியுள்ளனர்

கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சிக் குழுவொன்றிற்கு ஆயுதம் வழங்கினார் என்ற குற்றச் சாட்டில் உதயங்க சிக்கியுள்ளார் மேற்படி கிளர்ச்சிக்குழு ரஷ்யாவுக்கு ஆதரவான குழு என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறானதொரு பின் புலத்திலேயே உதயங்கவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு  ர~;யாவிடம் கூறியுள்ளது .

Related posts: