2018 ஆம் ஆண்டு முதல் வாகன விற்பனை  கட்டுப்படுத்தப்படும்!

Friday, October 27th, 2017

சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனையை கட்டுப்படுத்த  அந்நாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் மற்றைய நாடுகளை விட வாகனங்களை வாங்க அதிக செலவாகும் நாடான சிங்கப்பூரில், தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து, பொது போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் அதிகரித்துக் கொண்டே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையால், அங்கு சாலை விரிவாக்கத்துக்கான சாத்தியக்கூறுகளும் குறைவாக இருக்கிறது. இதனால் தனயார் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் கார் விற்பனையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சிங்கப்பூர் சாலை போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் கார்கள் தவிர மோட்டார் சைக்கிள்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நடைமுறையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பொது போக்குவரத்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் சரக்கு வாகனங்கள் வழக்கம்போல் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: