பெல்ஜியம் பிரதமர் இராஜினாமா!

Wednesday, December 19th, 2018

பெல்ஜியத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சி விலக்கிக்கொண்டதையடுத்து, பிரதமர் சார்லஸ் மைக்கேல் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, புதிய பிளெமியம் கூட்டணி திடீரென வாபஸ் பெற்றது.

பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள விரும்பாத பிரதமர் மைக்கேல் தன் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அகதிகள் குறித்த ஐ.நா ஒப்பந்தத்திற்கு எதிராக பிரசல்ஸ் நகரில் சமீபத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றது. இதன்போது பிரதமர் மைக்கேல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரை பதவியில் இருக்குமாறு பிரதமர் மைக்கேலை மன்னர் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: