அருணாசல பிரதேச மாநிலத்தில் ஆட்சியை இழக்கிறது காங்கிரஸ் !

Saturday, September 17th, 2016

அருணாசல பிரதேச முதல்வர்  பிமா காண்டு உள்பட 44 எம்.எல்.ஏ.க்கள் அருணாசல பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால் அங்கு ஆட்சியை காங்கிரஸ் கட்சி இழக்கிறது.

அருணாசல பிரதேசத்தில் கடந்த 2014–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அந்த கட்சி சார்பில் நபம் துகி முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்தார். ஆளும் காங்கிரசில் கடந்த ஆண்டு உட்கட்சி பூசல் வெடித்தது. கலிகோ புல் தலைமையில் காங்கிரசை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் முதல்–மந்திரிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கினர்.

எனவே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், அதிருப்தி கோஷ்டி தலைவர் கலிகோ புல், பா.ஜனதா ஆதரவுடன் முதல்–மந்திரியானார். இதை எதிர்த்து நபம் துகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அருணாசல பிரதேசத்தில் நபம் துகி அரசே மீண்டும் தொடர வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால் நபம் துகி தனது முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் முன்னாள் முதல்–மந்திரி டோர்ஜி காண்டுவின் மகனான பிமா காண்டு புதிய முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தலைமையிலான மந்திரி சபை கடந்த ஜூலை மாதம் பதவியேற்றது.

இவருக்கு அதிருப்தி முன்னாள் முதல்–மந்திரி நபம் துகி, கலிகோ புல் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு அளித்தனர். இந்த அரசு எந்த பிரச்சினையும் இன்றி மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த நிலையில், முன்னாள் முதல்–மந்திரி கலிகோ புல் கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் மாநில அரசியலில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதல்–மந்திரி பிமா காண்டு உள்பட 44 எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிராந்திய கட்சியான அருணாசல பிரதேச மக்கள்  60 உறுப்பினர்களை கொண்ட மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 47 உறுப்பினர்களும், பா.ஜனதாவுக்கு 11 உறுப்பினர்களும், 2 சுயேட்சை உறுப்பினர்களும் இருந்தனர். தற்போது முன்னாள் முதல்–மந்திரியான நபம் துகி மட்டுமே காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார். உட்கட்சி பூசல் தொடர்பாக 2 காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவி கேள்விக்குறியான நிலையில் உள்ளது.

முதல்மந்திரி உள்பட 44 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகியதன் மூலம் மாநில காங்கிரஸ் அரசு அருணாசல பிரதேச மக்கள் கட்சி அரசாக மாறி உள்ளது. இந்த அருணாசல பிரதேச மக்கள் கட்சி கடந்த 1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சி ஆகும். இந்த புதிய அரசு பா.ஜனதாவுடன் கூட்டணி சேருமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

எனினும் பி.பி.ஏ.வில் இணைந்தாலே அது வடகிழக்கு ஜனநாயக கூட்டணியின் அங்கமாகவே இருக்கும் என கருதப்படுகிறது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவால் கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இந்த கூட்டணியை தற்போது அசாம் பா.ஜனதா மந்திரியான ஹிமந்த பிஸ்வா சர்மா நிர்வகித்து வருகிறார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் உட்கட்சி பூசலால் ஆட்டம் கண்டிருந்த காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மீண்டும் உயிர்பெற்றது. ஆனால் அந்த அரசும் 2 மாதங்களுக்குள் காலியாகி இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

DSCF1124 copy

Related posts: