பெங்களூரில் மேலும் ஒருவர் பலி!

Tuesday, September 13th, 2016

கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது. கர்நாடகாவில் தமிழர்களை குறிவைத்து கன்னட அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்படுகிறது. துணை ராணுவப்படை அனுப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், இரு ஒரு விதமான பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று, பெங்களூரு ராஜகோபால் நகர் அருகே லக்கரே சர்க்கிளில் கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீஸ் ரோந்து வாகனத்திற்கு தீவைத்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது  பெயர் உமேஷ் (25) என்பது தெரியவந்தது. அவர் பெங்களூரு ஹெக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆவார். .மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்த நிலையில் காயம் அடைந்து மருத்துவமனையில் குமார் என்பவர் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

160912132113_karnataka_protest_640x360_bbc_nocredit

Related posts: