நிபா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம் –  சுகாதாரத்துறை!

Monday, June 4th, 2018

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நிபா வைரஸ் குறித்த பீதி தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் நிபா வைரஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் நிபா வைரஸ் வெளவால்கள், கால்நடைகள், மனிதர்கள் ஆகியவற்றில் எதன்மூலமாக பரவுகிறது என்பது குறித்து தீவிர ஆய்வு நடந்து  நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வனத்துறை ஒன்றாக இணைந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இந்நோய் குறித்து பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

Related posts: