ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவு-  பிரித்தானியா!

Friday, September 30th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிய பிறகான வர்த்தக சூழல் என்பது குறைந்த பட்சம் தற்போது உள்ள அதே அளவு சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று தான் விரும்புவதாக, பிரித்தானிய சர்வதேச வர்த்தக அமைச்சர் லியாம் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.

வேறு எதுவும் ஐரோப்பிய மக்கள் தீங்கு ஏற்படுத்தும் என்று ஃபாக்ஸ் கூறினார்.மான்செஸ்டரில் வணிக தலைவர்களிடம் பேசுகையில் , பிரிட்டன் உலக வர்த்தக அமைப்பின் ஒரு முழு, சுதந்திர உறுப்பினராக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக லியாம் ஃபாக்ஸ் முதன் முறையாக தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய தனி சந்தையில் தனது உறுப்பினர் நிலையை தக்கவைத்துக் கொண்டு, மென்மையான பிரெக்சிட் என்று அழைக்கப்படும் நிலையை ஐக்கிய ராஜ்யம் முயல வேண்டும் என்று ஃபாக்ஸ் நம்பவில்லை என்பதை உணர்த்தும் தெளிவான சமிக்கை தான் இது என பிபிசியின் ராஜாங்க விவகார செய்தியாளர் கூறுகிறார்.

_91450540_liamfox

Related posts: