வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது – எலோன் மஸ்க் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023

வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin)  விமான விபத்தில்  மரணமடைந்துள்ளார்” என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக  உலகின் மிகப் பெரும் செல்வந்தரான   எலோன் மஸ்க் (Elon musk)  தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ரஷ்ய அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரிகோஷின், பெலாரஸின் ஜனாதிபதி  நடத்திய பேச்சுவார்த்தையைத்  தொடர்ந்து பின்வாங்கினார்.

இதனையடுத்து ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளால் அவர் கொல்லப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் மொஸ்கோவிலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரம் நோக்கி அவர் பயணித்த  விமானமானது திடீரென செங்குத்தாக கீழே விழுந்து விபத்துக்குள்ளானது எனவும் அதில் பிரிகோஷின் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ரஷ்ய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் பிரிகோஷினின் மரணம் எதிர்பார்த்த ஒன்று தான் என்பது போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், எலோன் மஸ்கும் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: