வாக்கெடுப்பு முடிவுகள் செல்லுபடியாக ஹங்கேரி அரசியல் சாசனம் திருத்தப்படும் – பிரதமர் விக்டோர் ஒர்பான்!

Tuesday, October 4th, 2016

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள், குடியேறிகளை கோட்டா முறையில் கட்டாயம் ஏற்றுகொள்வது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவு கட்டுப்படுத்தும்வகையில், நாட்டின் அரசியல் சாசனத்தை மாற்றப்போவதாக ஹங்கேரியின் பிரதமர் விக்டோர் ஒர்பான் தெரிவித்திருக்கிறார்.

வாக்களித்தோரில் 90 சதவீதத்திற்கு மேலானோர் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோட்டா முறையை நிராகரித்துள்ளனர்.

ஆனால், வாக்களித்தோர் 50 விழுக்காட்டுக்கு குறைவாக இருந்ததால், இந்த வாக்கெடுப்பின் முடிவு அதிகாரபூர்வமாக செல்லுபடியாகாமல் போய்விட்டது.

அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள தேவைப்படும் மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மை ஒர்பானுக்கு இல்லை.

நாடாளுமன்றத்தில், தேசியவாத ஜோப்பிக் கட்சியின் தலைவர் காபோர் வோனா, ஐரோப்பாவில் ஹங்கேரியின் நிலையை பலவீனப்படுத்தி விட்டதாக கூறி, ஒர்பான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

_91504135_7cc150c4-42d8-4e3b-9404-52c987083210

Related posts: