இஸ்ரேல், உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு ஆயுதங்களை உறுதி செய்ய காங்கிரஸ் செயல்பட வேண்டும் – அமெரிக்க இராணுவத் தலைவர் கிறிஸ்டின் வொர்முத் வலியுறுத்து!

Tuesday, October 10th, 2023

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதல் உச்சம் அடைந்துள்ளது. இதனடிப்படையில், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் ஆயுதங்களை உறுதி செய்ய காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று அமெரிக்க இராணுவத் தலைவர் கிறிஸ்டின் வொர்முத் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியினர் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை செயலிழந்துள்ளதாகவும் இராணுவச் செயலர் கிறிஸ்டின் வொர்முத் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமையன்று ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதனால் ஹமாஸ் மீது இஸ்ரேல் போரை அறிவித்தது.

மத்திய கிழக்கில் ஒரு பெரிய புதிய போரைத் தொடங்கும் அறிவிப்பாக இது உள்ளது. ஹமாஸ் தாக்குதல்களை அடுத்து, ஆயுதங்களை அனுப்புவது உட்பட இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக வாஷிங்டன் உறுதியளித்துள்ளது.

பாதுகாப்பு உதவிக்கான முதல் கப்பல் எதிர்வரும் சில நாட்களில் இஸ்ரேலை வந்து சேரும்.

வெடிமருந்துகளுக்கும் அவர்களே பணம் செலுத்த வேண்டும்,” எனவும் வொர்முத் செய்தியாளர்களிடம் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

தெற்கு இஸ்ரேலில் கடத்தப்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்களில் அமெரிக்கர்களும் இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் ஆனால், அதுபற்றி மேலதிக விவரங்கள் இல்லை என்றும் கூறினார்.

அமெரிக்கா, தனது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பலநூறு கோடி டொலர்கள் அளவிலான இராணுவ உதவியை அனுப்புகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் மிகப்பெரிய நாடாக உள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸா வன்முறைகள் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரைவில் நியூயார்க்கில் கூட உள்ளது.

காஸாவை சேர்ந்த ஹமாஸ் இயக்கம் நடத்திய இஸ்ரேல் மீதான தாக்குதல் காரணமாக தற்போது போர் உச்சம் அடைந்து உள்ளது.

அதற்கு காரணம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஹமாஸ், ஈரான், லெபனான், அமெரிக்கா களமிறங்கி உள்ளது. அமெரிக்கா இங்கே போர் கப்பல்களை அனுப்ப உள்ளது.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான USS Gerald R. Ford தலைமையிலான குழு இஸ்ரேலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய விமான தாங்கி போர் கப்பல் ஆகும்.

அமெரிக்காவின் வலிமையான போர் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களும் இதில் உள்ளன.

இதனால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், லெபனான், எகிப்து மற்றும் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போராக மற்றும் ஹமாஸ் இயக்கத்துடனான போராக இது நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்படி நடக்கும் பட்சத்தில் இதில் ரஷ்யா, சீனா இணையலாம். ஏற்கனவே உக்ரைன் – ரஷ்ய போரில் உலக நாடுகள் பிரிந்து கிடக்கின்றன. அமெரிக்கா உள்ளே வருவதால் தற்போது இதில் சீனாவும் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: