நடுக்கடலில் விபரீதம்: 21 பெண்கள் பலி!

Saturday, July 23rd, 2016

நைஜீரியா மற்றும் சிலி நாட்டை சேர்ந்த குடியேறிகள் மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்ற போது, அந்த படகில் 22 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 209 பேர் இத்தாலி நாட்டை நோக்கி படகில் சென்றபோது, லிபியாவுக்கு அருகில் வைத்து சர்வதேச கண்காணிப்பு குழுவினர் அந்த படகினை மடக்கி சோதனையிட்டனர்.

இதில் படகின் கீழ்தளத்தில் 21 பெண்களின் உடல்கள் மற்றும் ஒரு ஆணின் உடல் பிணமாக கிடந்தனர். இந்த படகில் 50 குழந்தைகள் உட்பட மொத்தம் 209 பேர் பயணித்துள்ளனர், ஆனால் இந்த 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை.

தண்ணீரும், டீசலும் ஒன்றாக கலந்து விட்டதால், அதிலிருந்து நச்சு பரவி இவர்களை சுயநினைவிழக்க செய்ததுடன் படிப்படியாக மரணத்திற்கு வழிவகுத்துள்ளது என humanitarian group Medecins Sans Frontieres (MSF) தலைவர் Jens Pagotto கூறியுள்ளார்.மேலும் இது ஒரு பயங்கரமான மரணம் எனவும் கூறியுள்ளார், இந்த படகில் பயணம் செய்தவர்கள் மேற்கு ஆப்பிரிக்கா, நைஜீரியா மற்றும் கென்யா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டிற்கு கடலின் மூலம் பயணித்து 83,119 பேர் வந்துள்ளனர், இதில் 3,000 குடியேறிகள் இறந்துவிட்டார்கள் அல்லது காணாமல் போயுள்ளனர் என சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts: