2 ஆம் வகுப்பு வரை மாணவருக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 25th, 2018

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம்; கொடுக்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

புத்தகச் சுமை மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக மீண்டும் வந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அனைத்து மாநில செய்தித் தாள்களிலும் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி.கார்த்திகேயன் இந்த உத்தரவை தெலுங்கானா மகாரா~;டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளன என்றார்.

Related posts: