மோசமான விளைவுகளை அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும் – எச்சரிக்கும் வடகொரியா!

Sunday, May 2nd, 2021

அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வடகொரியா இன்று ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடன் தனது அண்மைய உரையில் வடகொரியா ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியதுடன், அதற்கான தமது விரோதக் கொள்கையினை வெளியிட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வாரம், ஜோ படைன் அமெரிக்கா காங்கிரஸுக்கான தனது முதல் உரையில், வட கொரியா மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டங்களை “அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் உலக பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்” என்று கூறினார்.

மேலும் இராஜதந்திரம் மற்றும் கடுமையான தடுப்பு மூலம் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வடகொரிய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி குவான் யொங் கன், அரை நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்கா தொடர்வதைப் போலவே வடகொரியா மீதான விரோதக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான பைடனின் நோக்கம் அவரது அறிக்கை தெளிவாக பிரதிபலிக்கிறது.

அமெரிக்கா தலைமை நிர்வாகி இன்றைய பார்வையின் வெளிச்சத்தில் ஒரு பெரிய தவறு செய்தார் என்பது உறுதிவிட்டதனால் காலப்போக்கில் ‍அமெரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையினை எதிர்நோக்க நேரிடும் என்றார்.

வட கொரியா என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை குவான் இன்னும் குறிப்பிடவில்லை, மேலும் அவரது அறிக்கை பைடன் நிர்வாகத்தின் மீது அதன் வட கொரியா கொள்கையை வடிவமைத்து வருவதால் அதன் மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக இதனை காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: