வாகன விபத்து: துபாயில் 17 பேர் உயிரிழப்பு!
Saturday, June 8th, 2019
துபாயில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 இந்தியர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பேருந்து வீதியொன்றில் மேற்புறம் இருந்த பெயர்ப்பலகையில் மோதி விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது பேருந்தில் வௌிநாட்டவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளதுடன், இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்று வௌியாகியுள்ளன.
Related posts:
அரசியல் கைதிகளை விடுவிப்பதாக மியன்மார் அரசு அறிவிப்பு!
மலேசியாவில் புதிய பாதுகாப்பு சட்டம்!
தைவானை அச்சுறுத்தும் சீனா - புதிய ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன் எல்லை மீறிய போர் விமானங்கள்!
|
|
|


