வட கொரியா அணுகுண்டு தாக்குதல்? அச்சத்தில் உறைந்த மக்கள்!

Monday, November 28th, 2016

ஜப்பானில் உள்ள முக்கிய நகர் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் தனது நாட்டு குடிமக்கள் எவ்வாறு அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகளை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியா மீது தாக்குதல் நடத்த ஜப்பான் இராணுவம் தயாராக வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து வட கொரியா ஜப்பானுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதில், ‘அமெரிக்காவுடன் இணைந்து இந்த முட்டாள்த்தனமான முடிவினை ஜப்பான் ராணுவம் எடுத்தால், அடுத்த சில வினாடிகளில் ஜப்பான் நாடு தூள் தூளாக சிதறிவிடும்’ என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், ஜப்பானில் உள்ள முக்கிய நகர் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தவும் வட கொரியா தயாராக உள்ளது என வெளியான ரகசிய தகவல்களை தொடர்ந்து தனது குடிமக்களுக்கு ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில், ‘ஜப்பான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் குடிமக்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.முதலில், வீட்டிற்குள் நுழைந்த உடன் கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடிவிட்டு ஜன்னல்கள் இல்லாத நிலவறைக்கு செல்ல வேண்டும்.

பின்னர், ஆடைகளை உடனடியாக நீக்கிவிட்டு கை, கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் குறையும்.

மேலும், தாக்குதல் நிகழும்போது ஏற்படும் நெருப்பு வெளிச்சத்தை யாரும் நேரடியாக பார்க்க கூடாது.அவ்வாறு பார்த்தால் கண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என சிறிய துண்டு பிரசுரங்கள் மூலம் தனது குடிமக்களுக்கு ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டை நாடான வட கொரியாவால் தனது நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த ஜப்பான் குடிமக்கள் தற்போது அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: