இஸ்லாமிய மதகுரு கொல்லப்பட்டமை தொடர்பில் இருவர் மீது வழக்கு!

Saturday, September 17th, 2016

இங்கிலாந்தில் இஸ்லாமிய மதகுரு கொல்லப்பட்டமை தொடர்பில் மொஹமட் சீடே மற்றும் மொஹமட் அப்தல்காதிர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் ஜலால் உத்தின் என அழைக்கப்படும் குறித்த மதத்தலைவர் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மொஹமட் சீடே மற்றும் மொஹமட் அப்துல் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டள்ளது.

இவர்கள் இருவரும் குறித்த மத தலைவரை கொலை செய்வதற்றகாக பல மாதங்கள் திட்டம் தீட்டியிருந்தனர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவத்தில் மொஹமட் சீடே குறித்த மதத் தலைவரை தாக்கவில்லை எனவும் இருப்பினும் அவருக்கு கொலையில் பெரும் பங்களிப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலால் உதினின் தலையில் காணப்பட்ட  காயமே அவரின் உயிரிழப்பிற்கு  காரணம் என வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மதத் தலைவர் இங்கிலாந்து மன்செஸ்டர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

download

Related posts: