வடகொரிய இராணுவத்தின் 75ஆவது ஆண்டு விழா – மகளுடன் பங்கேற்றார் கிம் ஜாங் உன்!
Friday, February 10th, 2023
வடகொரிய இராணுவம் நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், இராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாலி தாக்குதலில் 3 படையினர் பலி!
விண்வெளிக்கு சென்ற பூனைக்கு சிலை!
தீர்வின்றி தொடரும் கொரோனா அச்சுறுத்தல் : ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று !
|
|
|


