விண்வெளிக்கு சென்ற பூனைக்கு சிலை!

Tuesday, November 14th, 2017

கடந்த 1963ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆந் திகதி ‘வெரோனிக் ஏஜிஐ’ என்ற ராக்கெட் மூலம் பூனை ஒன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

பூமியில் இருந்து 157 கி.மீட்டர் உயரத்துக்கு சென்ற பூனை 15 நிமிடத்துக்கு பிறகு பத்திரமாக பாராசூட் மூலம் உயிருடன் தரை இறங்கியது.

இதன் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சென்ற பூனை என்ற பெருமையை பெற்றது. இந்த பூனைக்கு பிரான்சில் வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இலண்டனை சேர்ந்த மாத்யூ செர்ஜ் செய்து வருகிறார்

Related posts: