துட்டகைமுனு மன்னனின் சகோதரியினது அரிய ஆவணம் கண்டுபிடிப்பு!

Sunday, March 26th, 2017

றுகுணுவில் அரிய வகையான ஆவணம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது இந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஜேர்மனியின் காவா நிறுவனம் இணைந்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொண்டன. இதன்கீழ் திஸ்ஸமஹாராம சர்வோதய தோட்ட அகழ்வு திட்டத்தின் மூலம் இந்த ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

றுகுணு வரலாற்றிற்கு தொடர்புடைய பல முக்கிய ஆவணம் இந்த திட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , மாத்தறை நட்சத்திர கோட்டையின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காணப்பட்ட சொத்துக்களுக்குள் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிக பழைமையான பாத்திரம் ஒன்றின் உடைந்த பகுதியாக அடையாளப்படுத்தப்பட்ட பொருளில் எழுத்தப்பட்ட விடயம் காவன்திஸ்ஸ அரசனின் மகளும் துட்டகைமுனு அரசனின் சகோதரி குறித்தும் கூறப்படுவதாக தெரியவந்துள்ளது.

மகாவம்சத்தில் உட்பட காவன்திஸ்ஸ அரசனின் மகள் தொடர்பில் தகவல் இல்லாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சொத்தில் அவரது மகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: