வடகொரியா மீது பாரிய அளவிலான பொருளாதார தடை!

Sunday, February 25th, 2018

வடகொரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பாரிய அளவிலான பொருளாதார தடைகளை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

50ற்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் கடல் வழி போக்குவரத்து நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த புதிய தடைகள் விதிக்கப்படவுள்ளதாக நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்களுக்கு நிதி, எரிபொருள் மற்றும் இராணுவத்தை நிலைநாட்ட உதவும் வகையில் செயற்படும் சுமார் 56 கப்பல்கள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை இலக்குவைத்து இந்த தடை விரைவில் விதிக்கப்படவுள்ளது.

அமெரிக்காவினதும் மற்றும் சர்வதேசத் தடைகளை வடகொரியா எதிர்கொண்டு வருகின்ற இந்நிலையில், மீண்டும் புதிய தடை விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: