வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை!
Friday, March 25th, 2022
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்த ஏவுகணை ஒரு உயரமான பாதையில் ஏவப்பட்டிருக்கலாம் என்று தென் கொரியா கூறியுள்ளது.
வடகொரியாவின் மிகப்பெரிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக பாலிஸ்டிக் ஏவுகணை கருதப்படுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது.
அதன்படி, இன்று ஏவப்பட்ட இந்த ஏவுகணை 1100 கிலோமீற்றர் தூரம் வரையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக செல்லக் கூடியது, அத்துடன் இது சக்திவாய்ந்தது என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெற்றிகரமான சோதனைகளும் உளவு செயற்கைக்கோளுக்கான கமராக்கள் மற்றும் பிற அமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவை என்று வட கொரியாவின் அதிகாரப்பூர்வ தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


