வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம்!

அமெரிக்கா உட்பட உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்க தென்கொரியா மற்றும் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளன.
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் வடகொரியாவின் இந்த செயலால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்-னும் தொலைப்பேசியில் பேசிக் கொண்டதாகவும், அப்போது வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.தூதரக ரீதியில் வடகொரியாவை ஒதுக்கி வைப்பது, மேலும் பல பொருளாதார தடைகள் விதித்து வடகொரியாவுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கவும் இருநாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக் கொண்டதாக தென் கொரிய தெரிவித்துள்ளது.
Related posts:
|
|