நேட்டோவின் தீர்மானத்தை அமெரிக்கா மதிக்கும்: துணை அதிபர் ஜோ பைடன்!

Wednesday, August 24th, 2016

பால்டிக் குடியரசு நாடுகள் தாக்குதலுக்கு உட்பட்டால், அவர்களை பாதுகாப்பதாக நேடோ உறுதியளித்திருப்பதை அமெரிக்க மதிக்கும் என பால்டிக் குடியரசிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

லாட்வியாவின் தலைநகர் ரிகாவிலிருந்து பேசிய பைடன், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.லாட்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா நாடுகள், ரஷியாவால் படையெடுக்கப்பட்டிருந்தால் உதவி செய்திருக்க மாட்டோம் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.

உறுப்பு நாடுகள் ஒருவரை ஒருவர் காத்துக்கொள்வது கடமையாக கருதப்படும் நேடோ ஒப்பந்தத்தை அவர் புரிந்துக்கொள்ளாமல் இருந்திருப்பார் என பைடன் தெரிவித்துள்ளார்.

Related posts: