போலி ஓட்டுநர் உரிமம்; அவுஸ்திரேலிய குடியுரிமை இரத்து!

Friday, January 24th, 2020

அலி ஹைதரி எனும் ஆப்கானியர் 2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்.

2014ம் ஆண்டு இவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெற இவர் சமர்பித்த ஆப்கான் ஓட்டுநர் உரிமம் போலியானது எனத் தெரிய வந்துள்ளது.

லொரி ஓட்டுநராக வேலைச் செய்ய இவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும், ஆப்கானில் இவருக்கு லொரி ஓட்டிய அனுபவம் இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக, இவரது அவுஸ்திரேலிய குடியுரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களிடம் பணம் கொடுத்து, போலியான ஆப்கான் ஓட்டுநர் உரிமத்தை பெற்றதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஹைதரி தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையத்திலிருந்து வெளியேறிய பிறகு வேலைத் தேடியதாகவும், அதற்கு ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டதால் இச்செயலில் ஈடுபட்டதாக ஹைதரி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

ஹைதரியின் அவுஸ்திரேலிய குடியுரிமை இரத்து செய்யப்பட்ட நிலையில், நல்ல பண்பு இல்லாதவர் என்ற அடிப்படையில் குடியுரிமை தொடர்பான இவரது மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: